Saturday, 15 April 2017

மாணவர்களின் சித்திரை புத்தாண்டு கவிதை படைப்புகள்

நாம் நினைப்பது நன்றானால்
நடப்பது நன்றாகும்
முடிந்ததை மறப்போம்
நடப்பதை நினைப்போம்

அனைவருக்கும் இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள் !
அன்புடன்
தனுஷ் ரூவின் - ஆண்டு 6

வருக! வருக! 
சித்திரை புத்தாண்டே

வாழ்த்தி வருக!
சித்திரை புத்தாண்டே
இயற்கை சித்திரை புத்தாண்டே 
மானிடருக்கு மகிழ்ச்சி தரும் 
சித்திரை புத்தாண்டே
அனைவருக்கும் புத்துணர்ச்சி கொடுக்கும்
சித்திரை புத்தாண்டே

அனைவருக்கும் இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள் !
அன்புடன்
கு.யுஷாலினி - ஆண்டு 5

சித்திரை புத்தாண்டு பிறந்ததாம்....
கோவிலுக்குச் செல்லலாம்.....
புது புது ஆடைகளை அணியலாம்....
மகிழ்ச்சியாக இருப்பதைக் காணலாம்...

அனைவருக்கும் இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள் !
அன்புடன்
கு.தண்மதி சின்னம்மா - ஆண்டு 2

கோபம் அடங்கட்டும்
பயம் விலகட்டும்
மகிழ்ச்சி பெருகட்டும்
ஒற்றுமை வளரட்டும்
பெருமை கிடைக்கட்டும் !

அனைவருக்கும் இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள் !
அன்புடன்
இ.திபாகர் - ஆண்டு 4

No comments:

Post a Comment