ஓய்வு நேரத்தை நல்ல வழிகளில் கழிக்க உதவுவது மகிழி. என் மகிழி கதைப் புத்தகம் வாசிப்பது ஆகும். கதைப் புத்தகம் வாசிப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. ஓய்வு நேரத்தில் கதைப் புத்தகங்களை வாசிப்பதன் மூலம் நம் வாசிப்புத் திறன் வலுப்படுகிறது. மேலும், வாசிப்பதன் மூலம் சொல்வளம் பெருகுகிறது. புதிய சொற்களைத் தெரிந்து கொண்டால், நாம் கட்டுரை எழுதும் போது சுலபமாக இருக்கும்.
நான் ஓய்வு நேரத்தில் கதைப் புத்தகம் வாசிப்பேன். பள்ளி நூலகத்தில் இருக்கும் கதைப் புத்தகங்களை இரவல் பெறுவேன். அந்தப் புத்தகங்களை ஓய்வு நேரத்தில் படிப்பேன். உறங்கப் போவதற்கு முன்பும் நான் கதைப் புத்தகங்களை வாசிப்பேன்.
நான் வாசித்த கதைகளையும் அதில் உள்ள நல்ல செய்திகளையும் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வேன். என் நண்பர்களையும் கதைப் புத்தகங்களை வாசிக்கச் சொல்வேன்.
கதைப் புத்தகம் வாசிப்பதன் மூலம் நம்முடைய நேரத்தை நல்ல முறையில் கழிக்க உதவும். ஆகவே, கதைப் புத்தகங்களை வாசித்து ஓய்வு நேரத்தை நல்வழியில் கழிக்கலாம்.
ஆக்கம்
தண்மதி சின்னம்மா த/பெ குணசேகரன்
ஆண்டு 2
என் ஓய்வு நேரத்தில் நான் வறைவேன்.
ReplyDelete