Monday, 24 July 2017

ஏழை எலியும் பணக்கார எலியும்


ஒரு கிராமத்தில் ஏழை எலியும் பணக்கார எலியும் வாழ்ந்து வந்தனஏழை எலியின் பெயர் அகிலன்பணக்கார எலியின் பெயர் இராமுஇந்த இரண்டு எலிகளும் இணைப்பிரியாத நண்பர்கள்.
          அகிலன் எப்பொழுதும் சுறுசுறுப்பாக வேலை செய்தது. இராமுவோ எப்பொழுதும் சோம்பலாக இருந்தது. தன் அப்பா சேகரித்து வைத்துச் சென்ற பணத்தை இராமு அள்ளி இறைத்தது..
     அகிலன் பண்புடனும் அன்புடனும் தன் நண்பர்களுடன் பழகும். ஆனால். இராமுவோ தன் நண்பர்களுடன் கோபத்துடன் நடந்து கொள்ளும். இதனால், இராமுவிடம் யாரும் நட்புக் கொள்வதில்லை.
     அகிலன் நன்றாக உழைத்து, பணத்தைச் சேமித்து இராமுவைவிட பத்து  மடங்கு பணக்காரன் ஆனது. இராமு அதைப் பார்த்து பொறாமை அடைந்தது.
     ஒரு நாள் இராமு, அகிலனின் வீட்டிற்கு வந்து, என் பணம் எல்லாம் குறைந்து விட்டது என்று பொய் சொன்னது. அகிலனின் பணத்தை அபகரிக்க எண்ணம் கொண்டது.
     அகிலனும் பரிதாபப்பட்டு  தன் வீட்டில் இடம் தந்தது இரவு நேரத்தில் இராமு பணத்தைக் கொள்ளை அடிக்கச் சென்றது. செல்லும் வழியில் கால் தடுக்கி, “அம்மா!” என்று கதறி கிழே விழுந்தது. தூங்கிக் கொண்டிருந்த அகிலன் எழுந்து அரக்கப் பரக்க வந்தது. தரையில் விழுந்து கிடந்த இராமுவைப் பார்த்தது. உடனே, இராமுவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது.

     இராமுவும் குணமாகி அகிலனிடம் தான் பொய் சொல்லி வீட்டிற்கு வந்ததைச் சொன்னது. ஆயினும், அகிலன் திறந்த மனப்பான்மையுடன் தன் நண்பன் இராமுவை மன்னித்து ஏற்றுக் கொண்டது. அன்றையிலிருந்து இருவரும் மீண்டும் இணைபிரியாத நண்பர்களாக வாழ்ந்தனர்.

படைப்பு
ச.ஜெக்சன் ராஜ்
ஆண்டு 4

No comments:

Post a Comment